2021 மே 18, செவ்வாய்க்கிழமை

'சமுர்த்தி உத்தியோகத்தர்கள் திறமையுடன் செயற்படவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எம்.எஸ்.எம்.நூர்தீன்

சமுர்த்தி திட்டத்தை மேலும் சிறப்பாக செய்வதற்கு அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களும் திறமையாக செயற்பட வேண்டும் என்று  வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (4)  சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்

இந்தச் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன்  உட்பட மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சிரேஷ்;ட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,  

'நடந்த தவறுகளை திருத்திக்கொண்டு எதிர்காலத்தில் சமுர்த்தி திட்டத்தை  சிறப்பாக முன்னெடுக்கவேண்டும். விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொறுப்பாக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் இந்த சமுர்த்தி திட்டத்தில் மிகவும் கவனமாக இருக்கின்றார். அவர் மிகவும் நல்லவர், உதவக்கூடியவர். இந்த சமுர்த்தி திட்டத்தை சிறப்பாக செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களும் இந்த சமுர்த்தி திட்டத்தை சிறப்பாக செய்யவேண்டும்' எனக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .