2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கால்நடை வளர்ப்பாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கடந்த வெள்ள அனர்த்தத்தின்போது பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களை   மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரானில்  புதன்கிழமை (4) மாலை  சந்தித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  இரா.துரைரெட்ணம், அவர்களின் பிரச்சினைகளையும்  கேட்டறிந்துகொண்டார்.

அண்மைக்காலமாக  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  கால்நடை வளர்ப்பாளர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகி;ன்றனர். குறிப்பாக மேய்ச்சல்தரைக் காணிகளில் அத்துமீறிய  பயிர்ச்செய்கை, வனஜீவராசி திணைக்களத்தின் கெடுபிடிகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றுக்கான தீர்வை பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினரிடம் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரியுள்ளனர்.

தமது கால்நடைகளை, மேய்ச்சல்தரைக் காணிகளில் அத்துமீறிய பயிர்ச்செய்கையில்; ஈடுபட்டுள்ளவர்கள் சுடுகின்றனர்.  மாடுகளையும்  பிடித்துச்செல்வதுடன், சில வேளைகளில் மாடுகளை பிடித்துவைத்துக்கொண்டு பணம் கேட்;பதாகவும் கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன்,  வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நிவாரணம்  பெற்றுத்தரவேண்டும் என்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் கோரியுள்ளனர்.

இந்த நிலையில், கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதுடன்,  பல மாடுகள் கடத்திச்செல்லப்பட்டன.  பல்வேறு வழிகளிலும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இந்த மாவட்டத்தில் மூவாயிரம் கால்நடைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டன. ஆகவே, கால்நடை வளர்ப்பாளர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸிடம் கோரியுள்ளேன். அதேபோன்று, மேய்ச்சல்தரை பிரதேசத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் கடந்தகாலத்தில் பல தடவைகள் விவாதிக்கப்பட்டன. எனினும், இதுவரையில் எதுவித தீர்வும் கிடைக்கவில்லை. உரிய தீர்வை பெற்றுக்கொள்ள தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும்; அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .