2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாணசபை உறுப்பினராக அலி சாஹீர் மௌலானா

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் நகரசபைத் தலைவரான செய்யத் அலி சாஹீர் மௌலானா,  எதிர்வரும் 9ஆம்  திகதி கிழக்கு மாகாணசபை உறுப்பினராக கிழக்கு மாகாணசபையில் சத்தியப்பிரமானம் செய்யவுள்ளார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்து தனது பதவியை இராஜினாமா செய்த எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வெற்றிடத்துக்கு தான் நியமிக்கப்பட்டுள்ளதாக செய்யத் அலி சாஹீர் மௌலானா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்ட  அலி சாஹீர் மௌலானா அந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றார்.

அலி சாஹீர் மௌலானாவின் பெயர் வர்த்தமானியில்; கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராக பிரகடனப்படுத்தப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X