Suganthini Ratnam / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகளும் மக்களின் கோரிக்கைகளும் நியாயமாக மக்கள் முன்னால் காட்டப்படவேண்டும். யாரையும் விமர்சிப்பதாலோ, அபாண்டமான வதந்திகளை சுமத்துவதாலோ இந்த மக்களுக்கு நீதி கிடைக்கும் என்று எண்ணுவது தவறானது என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் தலைமையுரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இந்த நாட்டில் பல்வேறு இனங்களும் மதங்களும் வாழுகின்ற சூழ்நிலையில் இலங்கையில் ஐக்கியமும் சமாதானமும் சுதந்திரமும் இறையாண்மையும் மிக முக்கியமானது என்பதே இந்த நாட்டில் சுதந்திரத்திற்காக தங்களை அர்ப்பணித்த அத்தனை மூத்த அரசியல்வாதிகளின் கருத்தாகவும் சிந்தனையாகவும் இருந்தது.
இந்த நாட்டு மக்கள் சுதந்திரமாக தங்களுடைய நாட்டில் இறையாண்மையுடன் வாழவேண்டும் என்பதற்காக தங்களது உயிர்களை தந்த பல அரசியல் தலைவர்கள், சிறைகளில் வாழ்க்கையை தொலைத்த பல அரசியல் தலைவர்கள், அதுபோல் இந்த சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள் தன்னுடைய வாழ்வினையும் சொத்துக்களையும் தொலைத்த பொதுமக்கள் என அனைத்து தரப்பினரினதும் அர்ப்பணிப்பு தியாகத்தின் மூலம் கிடைத்த சுதந்திரத்தினைத் தான் நாம் இன்று கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .