2021 மே 08, சனிக்கிழமை

பாடசாலைக்கு கூடாரம் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 06 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கடந்த டிசெம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு சித்தாண்டி உதயன் மூலை விவேகானந்தா வித்தியாலத்துக்கு, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால், வெள்ளிக்கிழமை (06) கூடாரங்கள் வழங்கப்பட்டன.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் ரீ. வசந்தராஜா இதனை வழங்கி வைத்தார்.

பாடசாலைக் காலைக் கூட்டம், மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் ஒன்று கூடல், பாடசாலை சமையல் பகுதி, பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டம் மற்றும் கிராமத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்குப் பாவிப்பதற்காக மூன்று கூடாரங்கள் பாடசாலை அதிபர் மனோன்மணி மகேஸ்வரனிடம் இதன்போது கையளிக்கப்பட்டன.

கடந்த வெள்ளத்தின் போது முற்றாக சேதமடைந்து மழை ஒழுக்குடன் காணப்படும் தமது பாடசாலைக்கு இந்த கூடாரங்கள் வழங்கப்பட்டது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கிராமத்து மக்களுக்கும் பேருதவியாக அமைந்தது என பாடசாலை அதிபர் மனோன்மணி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X