Gavitha / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபை பிரிவில் டெங்கு காய்ச்சல் காரணமாக இளைஞனொருவன் இன்று காலை உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.
காத்தான்குடி புதிய காத்தான்குடி கோழிவியாபாரி வீதியைச் சேர்ந்த எம்.எச்.சிபான் (வயது 26) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
இவர் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து விட்டு விடுமுறையில் வீடு வந்த பின்னரே டெங்கு காய்ச்சல் எற்பட்டுள்ளது.
கடந்த 15 தினங்களுக்கு முன்னர் டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேற்படி இளைஞன், தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.
காத்தான்குடி நகரசபை பிரிவில் சனிக்கிழமை சிறுமியொருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025