2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சைவமகா சபையின் 61ஆவது ஆண்டு நிறைவு விழா

Gavitha   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  


மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி சைவமகா சபையின் 61ஆவது ஆண்டு நிறைவு விழாவும் பொங்கல் விழாவும் ஞாயிற்றுக்கிழமை (08) சைவமகாசபை மண்டபத்தில் நடைபெற்றது.


சைவமகா சபையின் தலைவர் கு.நகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், ஆத்மீக அதிதியாக கிரியாஜோதி சிவ ஸ்ரீ.மு.முத்துக்குமாரன் குருக்கள் கலந்து கொண்டார்.


மேலும் இந்நிகழ்வில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலாளர் கலாநிதி.எம்.கோபாலரெத்தினம், களுவாஞ்சிகுடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் உட்பட அறநெறிப் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இதன்போது, களுவாஞ்சிக்குடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் பூஜை  இடம்பெற்றது. பின்னர் அறநெறிப் பாடசாலை மாணவர்களிடையே பேச்சு, பண்ணிசை, பாவோதல், போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .