Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 பெப்ரவரி 10 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
யுத்தம், சீரற்ற அரசியல் போன்ற காரணங்களால் சீர்குலைந்து பாராமுகமாக கிடக்கும் மட்டக்களப்பு தமிழர்களுடைய மொழி, கல்வி, கலை, இலக்கியம், சமயம், கலாசாரம், சமூகம் போன்றவற்றை கட்டியெழுப்புவதற்காக மட்டக்களப்பின் சமூகநல நோக்குடையோர், புத்திஜீவிகள், சமயத்தலைவர்கள் ஒன்றிணைந்து மட்டக்களப்பின் அபிவிருத்திக்காக மட்டக்களப்பு தமிழ் பேரவையை உருவாக்கியுள்ளனர்.
இதன் தலைவராக ஏரூர் அமரன் எஸ்.எஸ்.அமல், பொதுச் செயலாளராக யோகநாதன் றொஸ்மன், பொருளாளராக சுப்பையா ஜெயமுரளி, உப தலைவர் வடிவேல் ஆனந்த சங்கர், உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர்.
இப்பேரவை அமைக்கும் கூட்டம், திங்கட்க்கிழமை நடைபெற்றத. இக்கூட்டத்தில் வாகரை முதல் துறைநீலாவணை வரையான பகுதிகளைச் சேர்ந்த பல அரச உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், இளைஞர் அமைப்புக்கள், சமூகசேவை அமைப்புக்கள், சமய ஒன்றியங்களைச் சேர்ந்தோர் பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்காலத்தில் மட்டக்களப்பின் தமிழ் வளர்ச்சிக்காக எவ்வாறு செயற்பட வேண்டும், சீர்குலைந்து காணப்படும் எமது கலாசார சீர்கேடுகளை எவ்வாறு சரிசெய்து கொள்ள முடியும், இன்று நாம் இழந்துள்ள உரிமைகளை மீளப்பெற நாம் என்ன செய்ய வேண்டும் என பலதரப்பட்ட விடயங்கள் இங்கு கலந்தாலோசிக்கப்பட்டதுடன் சில தீர்க்கமான முடிவுகளும் எடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு, கல்வியில் அடைந்துள்ள பின்னடைவை நிவர்த்தி செய்வதில் மட்டக்களப்பு தமிழ் பேரவை பெரியளவிலான பங்களிப்பை செய்ய வேண்டுமென பலராலும் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
வாகரை தொடக்கம் துறைநீலாவணை வரையிலான பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு ஒரு இளைஞர், யுவதி என்ற வகையில் அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இவ் அமைப்பாளர்கள் மட்டக்களப்பு தமிழ் பேரவையினுடைய நோக்கததையும் செயற்பாட்டையும் தங்கள் கிராமங்களில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கு அறிவிப்பதாகவும் அவர்களை ஒன்றிணைத்து செயற்படுத்தபோவதாகவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago