2021 மே 06, வியாழக்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் மரணம்

Kanagaraj   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன் 

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் துறையடி வீதியில் கடந்த 4 ஆம் திகதி  மோட்டார் சைக்கிள் சேற்றில் சறுக்கிவிழுந்து விபத்துக்குள்ளானதில்  காயமடைந்தவர் கடந்த 9ஆம் திகதி மரணமடைந்தார். 

 

சம்பவத்தில் காயமடைந்து  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த எருவிலைப் பிறப்பிடமாகவும் மருங்கைநகரை வதிவிடமாகக் கொண்ட சு.சுதர்சன் 21 என்பவரே மரணமடைந்துள்ளார்.


மண்டூர் இயந்திரப்படகின் ஊடாக கடந்த 4ஆம் திகதி, எருவிலுக்கு சென்றுகொண்டிருந்தபோது துறையடிவீதியில்  மோட்டார் சைக்கிள் சறுக்கிவிழுந்து விபத்துக்குள்ளானது என வெல்லாவெளிப்பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .