2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி ஒருவர் படுகாயம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 29 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடைக் கிராமத்தில்  இன்று புதன்கிழமை அதிகாலை காட்டு யானை தாக்கி அக்கிராமத்தை சேர்ந்த சீனித்தம்பி நவரெத்தினம் (வயது 55)  என்பவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திக்கோடைக் கிராமத்தினுள் புகுந்த யானை வீடு ஒன்றை  தாக்கியதுடன், அவ்வீட்டிலிருந்த இவரையும் தாக்கியுள்ளது.   
உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .