Suganthini Ratnam / 2015 ஜூலை 29 , மு.ப. 09:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா
காட்டு யானைகளின் தொல்லைகளை கட்டுப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாவற்கொடிச்சேனை, உன்னிச்சை, எட்டாம் கட்டை, இருநூறுவில், கரவெட்டி, கள்ளச்சேனை பிரதேச விவசாயிகளே இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காடுகள் அழிக்கப்பட்டமையினால் தங்களின் குடியிருப்புக்கள், பயிர்கள் ஆகியவற்றை யானைகள் சேதப்படுத்தி வருவருடன், இதனால், தங்களின் வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
யானைகளின் தொல்லை தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியபோதிலும், அவர்களினால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் கூறினர்.
யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில், இதற்கான நடவடிக்கையை எடுப்பதாக அரசாங்க அதிபர் தெரிவித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்துசென்றனர்.

16 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
44 minute ago
2 hours ago