Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூலை 30 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-.ஏ.எச்.ஏ.ஹுஸைன்
நல்லாட்சிக்கான அரசாங்கத்தை தெரிவுசெய்வதற்கான அரிய சந்தர்ப்பம் மீண்டும் பொதுமக்களின் கைகளுக்கு வந்துள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான முன்னாள் இணைப்பாளர் ஆர்.மனோகரன் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நல்லாட்சிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நோக்கில் வாக்காளர்களை தெளிவூட்டும்; வேலைத்திட்டம், மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் இலங்கைக்கு மிக முக்கியமானதொன்றாகும். எமது நாட்டின் எதிர்காலப் பாதையை நிர்ணயித்துக்கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.
சகல இன, மத சமூகங்களும் ஒன்றுகூடி சிறந்ததொரு நல்லாட்சியை தெரிவுசெய்வதற்கான அரியதொரு சந்தர்ப்பமாக எதிர்வரும் பொதுத் தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றார்.
'மேலும், தெரிவுசெய்யப்படும் அரசாங்கமும் அந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொருளாதார நன்மைகளை சமூகத்தின் சகல தரப்பினருக்கும் கிடைக்கக்கூடிய வழிவகைகளை செய்யக்கூடியதாக குறிப்பாக, சிறுபான்மையினரை ஒதுக்காத பக்குவமனம் கொண்டதாக இருக்க வேண்டும்.
அதிகாரப்பகிர்வு எல்லா இன சமூக மக்களுக்கும் கிடைக்க வேண்டும். கடந்த மூன்று தசாப்தகால சம்பவங்களின் உண்மைத் தன்மையை வெளிப்படையாக மக்களுக்கு தெளிவுபடுத்தி நல்லிணக்கத்தை காணவேண்டும் இத்தகைய பொறுப்புக்கள் இன்று பொது மக்களிடம் விடப்பட்டுள்ளன. எனவே இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி வாக்காளர்களை அறிவூட்ட வேண்டும்.' எனவும் அவர் தெரிவித்தார்.
16 Oct 2025
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Oct 2025
16 Oct 2025