2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

விபத்தில் 42 பேர் காயம்

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதேசத்தில்  திங்கட்கிழமை அதிகாலை வேளையில் தனியார் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 42 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கி சுமார் 65 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த இந்த பஸ் வண்டியின் டயர் ஒன்று வெடித்ததைத் தொடர்ந்து குடைசாய்ந்தது.

காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, வாழைச்சேனை மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைகள், பொலன்னறுவை வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சிறு காயங்களுக்குள்ளான சிலர்  சிகிச்சை பெற்றுக்கொண்டு வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .