2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

'தீர்வை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்'

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.வா.கிருஸ்ணா

தமிழர்களின் புரையோடிப்போயுள்ள பிரச்சினைக்கு இந்த காலத்தில் தீர்வைப்பெற்றுக்கொள்ளாவிட்டால் இனி எந்தக்காலத்திலும் தீர்வை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை ஏற்படும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

கல்லடி,உப்போடையில் ஞாயிற்றுக்கிழமை(02)நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இன்று தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று கேட்பவர்கள் அபிவிருத்தியை மட்டும் வைத்து தமிழர்களிடம் செல்கின்றனர்.அவர்கள் தமிழர்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பில் சிந்திப்பதில்லை.இவர்கள் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்று எங்களிடம் நேரடியாக கேட்டால் அதற்குரிய பதிலை நாங்கள் விரிவாக அளிப்போம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த நாட்டில் இருந்திருக்காவிட்டால் இன்று நீதிமன்றில் கூட தமிழ் மொழி பாவனையில் இருந்திருக்காது.தமிழை இந்த நாட்டில் அரசகரும மொழியாக்கியவர்கள் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினரே.தமிழர்களின் மிக முக்கிய பிரச்சினைகளை தீர்த்தவர்கள் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினரே என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .