Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
போதைவஸ்துப் பாவனையினால் இளைய சமுதாயம் அழிந்து கொண்டிருக்கின்றது. இளைய சமுதாயத்தை அழிக்கின்ற ஒரு வியாபாரமாக போதைவஸ்து வியாபாரம் இடம்பெற்றுக் கொண்டிருக்;கின்றது என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் சனிக்கிழமை (08) நடைபெற்ற போதை ஒழிப்பு தொடர்பான நிகழ்வில் உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், குடும்ப வன்முறைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் உள்ளிட்டவை இடம்பெறுவதற்கும் அடிப்படைக் காரணம் போதைவஸ்துப் பாவனையே ஆகும்' என்றார்.
'மேலும், மட்டக்களப்பபு மாவட்டமானது அதிக மதுபானப் பாவனையுள்ள மாவட்டமாக காணப்படுவதுடன், வறுமைக்கு உட்பட்டுள்ள மாவட்டமாகவும் உள்ளது. ஒரு இலட்சத்து எண்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் எந்தத் தொழிலையும் ஒரு நாளும் செய்யாதவர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்' என்றும் அவர் கூறினார்.
25 minute ago
47 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
47 minute ago
3 hours ago