Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Administrator / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் சிந்தித்து வாக்களித்தால் தமிழ்த் தேசியத்துக்கு 3 உறுப்பினர்களையும் அபிவிருத்திக்கு ஒருவரையும் தேர்ந்தெடுக்கலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
களுதவளையில் இன்று வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைப்பதென்பது உறுதியாகியுள்ள நிலையில் என்னையும் ஆளும் கட்சியில் அமைச்சராக்குவதற்கு உங்களுக்கு கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
எனக்கு கிடைக்கும் ஆதரவைக் கண்டு ஏனைய வேட்பாளர்கள், பொய் பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
என் பின்னால் வரும் மக்கள் கூட்டத்தைக் கண்டு பயந்தவர்களே இவ்வாறான பொய் பிரசாரங்களில் இடுபடுவதாகவே நான் கருதுகின்றேன் என்றார்.
4 minute ago
12 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
17 minute ago