2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை

கிழக்கு மாகாண தேர்தல் முடிவு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீ;ன், வடிவேல் சக்திவேல், ஏ.எச்.ஏ.ஹுஸைன், வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன், பி.எம்.எம்.ஏ.காதர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி  127,185 வாக்குகளை பெற்று 03 ஆசனங்ககளை கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 38,477  வாக்குகளை பெற்று ஓர் ஆசனத்தை கைப்பற்றியுள்ள அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 32,359 வாக்குகளை பெற்று ஓர் ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 83638 வாக்குகளை பெற்று 02 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.  இலங்கை தமிழரசுக் கட்சி 45894 வாக்குகளை பெற்று ஓர் ஆசனத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 38463 வாக்குகளை பெற்று ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி 151013  வாக்குகளை பெற்று 04 ஆசனங்ககளை கைப்பற்றியுள்ளது.  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 89334 வாக்குகளை பெற்று 02 ஆசனங்களையும்  இலங்கைத் தமிழரசுக் கட்சி 45421 வாக்குகளை பெற்று ஓர் ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 ஆசனங்களில்  ஞா.சிறிநேசன் 46,421 வாக்குகளும் எஸ்.எஸ்.அமல் 39,321 வாக்குகளும், சீ.யோகேஸ்வரன் 34,039 வாக்குகளும் பெற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்ற பெற்றுள்ளது.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற ஓர் ஆசனத்தில் அலிசாகிர் மௌலானா 16,611 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி பெற்ற ஓர் ஆசனத்தில் எம்.எஸ்.எம்.அமீர் அலி 16,386 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட இரா. துரைரத்தினம் 32,450 வாக்குகளைப் பெற்று 1589 வாக்குகள் வித்தியாசத்தில் சீ.யோகேஸ்வரன் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர்கள்

தயா கமகே 68.201, பைசல் காசிம் 61.401, எச்.எம்.எம்.ஹரீஸ் 59.433, எம்.ஐ.எம்.மன்சூர் 58.536.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
விமலவீர திஸாநாயக்க 53.537,சிரியானி விக்கிரம 49.691.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி
கவீந்திரன் கோடீஸ்வரன் 17.779.ஆகியோரே வெற்றி பெற்றவர்களாவர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .