Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப் பலம் அதிகரித்துள்ளதுடன், இனிவரும் எந்தத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர் ச.வியாளேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஈச்சந்தீவு கிராம மக்கள் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை ஈச்சந்தீவு விநாயகர் கோவில் முன்றலில் இடம்பெற்றது.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப்பலம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் தமிழ்த்; தேசியக் கூட்டiமைப்பு அதிகப்படியான வாக்குகளால் அமோக வெற்றி பெறும். தமிழ் மக்கள் என்றும் தமிழ் தேசியத்தின்பால் நின்றுகொண்டிருக்கின்றார்கள். எமது மக்கள் வழங்கிவரும் ஆணையினால் இன்றும் தமிழ்த் தேசியம் சர்வதேசம்வரைப் பேசிக்கொண்டிருக்கின்றது' என்றார்.
இதன்போது, இக்கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாளேந்திரன், கன்னி நாடாளுமன்ற அமர்வின் பின் இப்பகுதி மக்களின் முக்கிய குறைபாடுகளை தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago