2021 மார்ச் 03, புதன்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்து: பெண் பலி

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான் பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (21) மாலை இடம்பெற்ற விபத்தில் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான ஹாசித் பாத்திமா  மௌபியா என்ற குடும்ப பெண் உயிரிழந்துள்ளார் என வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

புலாவடியிலிருந்து கிரான் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தபோது, பிரான் பிரதேசத்தில் வீதியின் குறுக்கே காணப்பட்ட பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் வீழ்ந்ததினால், மோட்டார் சைக்கிளின்  பின்னால் அமர்ந்திருந்த குறித்த பெண் வீதியில் தூக்கி  வீசப்பட்டுள்ளார். இந்நிலையில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் மோட்டர் சைக்கிள் செலுத்தியவரை வாழைச்சேனை பொலிஸார் தடுத்து வைத்து விசாரைணகளை மேற்கொண்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .