Suganthini Ratnam / 2015 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சுகாதார அமைச்சு அதிகாரிகள் குழு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்து பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஆரோக்கிய நட்பு நிலையம் மற்றும் இருதய கிளினிக்கின் செயற்பாடுகளையும் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, ஆரோக்கிய நட்பு நிலையத்தினதும் மற்றும் இருதய கிளினிக் பிரிவினதும் குறைநிறைகளையும் இவர்கள் கேட்டறிந்துகொண்டனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பி.ஜி.மஹிபால தலைமையிலான குழுவினருடனான சந்திப்பில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.முருகானந்தம், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
33 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
40 minute ago
1 hours ago