2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ரூ. 22 மில்லியன் செலவில் சுகாதார பணிமனை அமைப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜவ்பர்கான்,றிபாயா நூர்,ஆர்.அனுருத்திரன்,எல்.தேவ்.)

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புலிபாய்ந்தகல் பகுதியில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் யுனிசெப் அனுசரணையுடன் 22 மில்லியன் ரூபாய் செலவில் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை அமைக்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் வழிகாட்டலில் நிர்மாணிக்கப்படவுள்ள இக்கட்டிடத்திற்கான அடிக்கல்லை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கடந்த 27ஆம் திகதி நாட்டி வைத்தார்.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எம்.அச்சுதன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர், மட்டக்களப்பு மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.சதுர்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--