2021 மார்ச் 04, வியாழக்கிழமை

25 பயனாளிகளுக்கு ரட்டவிருவோ வீட்டுக்கடன்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


'ரட்டவிருவோ' வீட்டுக்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின்  களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 25 பயனாளிகளுக்கு திங்கட்கிழமை (07) வீட்டுக் கடன்கள் வழங்கிவைக்கப்பட்டன.

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒவ்வொரு பயனாளிக்கும் 300,000 ரூபா படி   வீட்டுக்கடன் வழங்கப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச்சென்றவர்கள் வீடுகளை பெற்றுக்கொள்ளும் வகையில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'ரட்டவிருவோ' வீட்டுக்கடன் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

'மஹிந்த சிந்தனையின் கீழ் வெளிநாட்டு வீரர்கள் என்னும் தொனிப்பொருளில் இக்கடன் திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன், திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திட்டத்தின் கீழ் 05  பேருக்கு வாழ்வாதாரக் கடன்களும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .