2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

25 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Kogilavani   / 2013 ஒக்டோபர் 17 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 25 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் தெரிவித்தார்.

தேசிய நுளம்பு ஒழிப்பு வாரத்திiயொட்டி காத்தான்குடி சுகாதார அலுவலகத்தினால், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காத்தான்குடி பொலிஸாரின் உதவியுடன் காத்தான்குடியில் சுகாதார பரிசோதனை ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன்போது, டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த குற்றச்சாட்டில் மேற்படி 25 பேருக்கும் எதிராக சட்டநடவடிக்கi மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எதிராகவும் டெங்கு நுளம்பை பெருகுவதற்கு காரணமாக இருந்ததற்காக அதன் அதிகாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 10 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றித்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன் ஏனையோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டாக்டர் நசிர்தீன் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .