2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

மட்டு. சிறைச்சாலைக்கு ஏறாவூரில் 250 ஏக்கர் காணி ஒதுக்கீடு

Menaka Mookandi   / 2014 ஜூலை 02 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு சிறைச்சாலைக்குரிய புதிய இடமாக ஏறாவூர் சவுக்கடி அக்மீர்வத்தைக்கு அருகில் கடற்கரையோரமாய் அமைந்த காணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் 'இது சிறைச்சாலைக்குச் சொந்தமான இடம், உட்பிரவேசிக்க தடை செய்யப்பட்டுள்ளது' என்ற அறிவித்தல் பலகை தொங்கவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்த இடத்திற்கு வருகை தந்த சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த இடத்தின் பொருத்தத் தன்மையைப் பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.

சவுக்கடி அக்மீர்வத்தைக்கு அருகில் சவுக்கு மரங்களும் கடலோரப் புதர்களும் நிறைந்த இந்தப் பகுதியில் உள்ள 250 ஏக்கர் நிலம் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கென கையகப் படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முதற்கட்டமாக 10 ஏக்கர் நிலப்பரப்பில் பிரதான சிறைக்கூடமும் அலுவலகமும் அமையும் என்றும் அவர் சொன்னார். அடுத்த ஆண்டு 2015 ஆரம்பத்தில் புதிய சிறைச்சாலைக்கான நிருமாணப்பணிகள் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மட்டக்களப்பு நகரத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குப் பக்கத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை மிகவும் குறுகிய நிலப்பரப்பிற்குள்ளேயே அமைந்துள்ளது என்பதும் சிறைச்சாலையைச் சூழவும் மக்கள் வாழும் பகுதியாக உள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .