2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

ரூ.25,000 உதவித்தொகை பெறாத குடும்பங்களின் விபரங்களை அனுப்புமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 19 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்த இடம்பெயர்வின் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட குடும்பங்களில் ரூபா 25 ஆயிரம் மீள்குடியேற்ற கொடுப்பனவு வழங்கப்படாத குடும்பங்களின் விபரங்களை அனுப்பி வைக்குமாறு  மீள்குடியேற்ற அமைச்சின் உதவித் திட்டப் பணிப்பாளர் திபானி பிரியங்கா மாவட்ட அரசாங்க அதிபரை கேட்டுள்ளார்.

இவ் மாவட்டத்தின் இடம்பெயர்ந்த 38123 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டு 3 வருடங்கள் கடந்து விட்ட போதிலும், 7 ஆயிரத்து 206 குடும்பங்களுக்கு மட்டுமே மேற்படி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

ஏனைய 28 ஆயிரத்து 796 குடும்பங்களுக்கு இதுவரை மேற்படி கொடுப்பனவு வழங்கப்படவில்லை என மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஐக் ஜனாதிபதியின் கவனத்திற்கு கடிதம் மூலம் கொண்டு வந்து அக்கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையடுத்து இது தொடர்பான பணிப்புரையை ஜனாதிபதி செயலகம் மீள்குடியேற்ற அமைச்சிற்கு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்கடிதத்தின் பிரதி நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--