Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தத்தின் போது வீடுகளை இழந்த நிலையில் நிறுவனங்களாலும் அரசாங்கத்தினாலும் அமைக்கப்பட்டு பூரணப்படுத்தப்படாத நிலையில் இருக்கும் வீடுகளை திருத்துவதற்கு 3 கோடி ரூபா நிதி மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை கல்குடா மற்றும் வாகரைப்பகுதியில் இடம்பெற்ற நிகழ்வுகளில் இந்த நிதியின் முதல்கட்ட காசேலைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அயராத முயற்சியில் பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த நிதியானது கல்குடா மற்றும் வாகரை மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளை சேர்ந்த 550 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
இதனடிப்படையில் கல்குடா பிரதேசத்தில் வீதது வீடுகளை புனரமைப்பு செய்வதற்காக 270 பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டதுடன் வாகரை 174பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.
கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற காசோலை வழங்கும் நிகழ்வில் கல்குடா பிரதேசத்தில் பாதிப்புற்று வீடுகளை புனரமைக்கவென தெரிவுசெய்யப்பட்ட 270 பேருக்கு காசோலைகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு காசோலைகளை வழங்கிவைத்தார்.
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் செயலாளர் எம்.பி.திஸாநாயக்க தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன்,கோரளை பற்று பிரதேச செயலாளர் கிரிதரன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதேநேரம் வாகரையிலும்; இடம்பெற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கலந்துகொண்டு காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.
வாகரைப்பிரதேச செயலகத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காசேலைகள் வழங்கப்பட்டன.
வாகரை பிரதேசத்துக்குட்பட்ட வடக்கு மற்றும் மத்திய பிரிவுகளில் வசிக்கும் சுமார்174 குடும்பங்களுக்கே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் இராகுலநாயகி,மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்பாளர் ரவீந்திரன்,மீள்குடியேற்ற செயலாளர் திஸாநாயக்க,மீள்குடியேற்ற அமைச்சின் ஊடக செயலாளர் ரொமோ ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
5 hours ago