2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

30 வருடங்களின் பின் மங்களகமவில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அலுவலகம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 19 , பி.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஒரேயொரு சிங்கள கிராமமான மங்களகமவில் 30 வருடங்களின் பின்னர் இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளை அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

கல்குடா தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் பிரதம அமைப்பாளர் எச்.டி.சந்திரபால பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

செங்கலடி பிரதேச செயலகப் பிரிலுள்ள மங்களகம மட்டக்களப்பு –அம்பாறை மாவட்த்தின் எல்லைக் கிராமமாகும். 1985ஆம் ஆண்டுமுதல் யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட இக்கிராமத்தில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களின் போது பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இக்கிராமத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கிளை அலுவலகம் திறக்கப்பட வேண்டுமென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரிலேயே அலுவலகம் திறக்கப்படடுள்ளதாக அங்கு உரைநிகழ்த்திய அமைப்பாளர் சந்திரபால தெரிவித்தார்.

திறப்பு விழா வைபவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மங்களகம அமைப்பாளர் கே.பியரத்ன, மங்களகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.உதயகுமார உட்பட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .