Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 25 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை இரண்டு சுயேட்சை குழுக்கள் தமது வேட்புமனுவை தாக்கல் செய்ததாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக முகம்மது அலி முகம்மது உவைஸ் தலைமையில் ஒரு சுயேட்சை குழுவும் உமர்லெவ்வை ஹயாத்து முகம்மது தலைமையில் இன்னுமொரு சுயேட்சை குழுவும் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று உள்ளூராட்சி மனறங்களுக்கு போட்டியிடுவதற்காக 39 சுயேட்சை குழுக்கள் இன்று மாலை வரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபைக்காக 18 சுயேட்சை குழுக்களும், ஏறாவூர் நகர சபைக்காக 16 சுயேட்சை குழுக்களும், ஓட்டமாவடி பிரதேச சபைக்காக 5 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி மற்றும் ஏறாவூர் நகர சபைகள் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மனறங்களுக்கான தோதல் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .