Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூலை 16 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
ஓட்டமாவடியில்; அமைந்துள்ள 3 உணவகங்களின் உரிமையாளர்களும் பேக்கரியொன்றின் உரிமையாளரும் எச்சரிக்கப்பட்டுள்ளனர் என, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி, டொக்டர் எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தெரிவித்தார்.
இங்குள்ள உணவகங்கள் துப்புரவின்றிக் காணப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து, ஓட்டமாவடியிலுள்ள உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் இன்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த உணவகங்களில் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களும் பழுதான பழங்களும் கைப்பற்றப்பட்டன.
ஒரு வாரத்துக்குள் இந்த உணவகங்களும் பேக்கரியும்; துப்புரவு செய்வதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் இந்த உணவகங்களையும் பேக்கரியையும் துப்புரவு செய்யாவிடின், அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
42 minute ago
54 minute ago
6 hours ago
19 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
54 minute ago
6 hours ago
19 Sep 2025