2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தலைவரின் 4ஆவது ஆண்டு நினைவு தின வைபவம்

Super User   / 2012 நவம்பர் 14 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)


தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் தலைவர் ரகு என அழைக்கப்படும் குமாரசுவாமி நந்தகோபனின் 4ஆவது ஆண்டு நினைவு தின வைபவம் இன்று புதன்கிழமை மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவு தின வைபவத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறப்பினருமான பூ.பிரசாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை உட்பட கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் நந்தகோபனினின் குடும்ப உறவினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது,  நந்தகோபனினின் உருவப்படத்திற்கு மலர் வைக்கப்பட்டதுடன் சுடர் ஏற்றப்பட்டு மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டன. குமாரசுவாமி நந்தகோபன் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு அருகிலுள்ள அத்துருகிரிய பிரதேசத்தில் வைத்து இனந்தெரியாதோரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .