Super User / 2010 செப்டெம்பர் 18 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் கமநல சேவைகள் திணைக்களத்திற்கு 4 கோடிரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளர் டாக்டர் ஆர்ருசாந்தன் தெரிவித்தார்.
கரடியனாறு கமநல சேவைகள் கேந்திர நிலையம், பசளை மற்றும் விவசாயிகளுக்கான பொருட்கள் உட்பட 4 கோடிரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.
தற்போது இக்கட்டிடம் பாவிக்க முடியாதளவுக்கு முற்று முழுதாக சேதமடைந்துள்ளதால் நிலையத்திற்கு அண்மையிலுள்ள தனியார் வீடு ஒன்றில் இயங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திங்கட்கிழமை முதல் தனியார் வீடொன்றில் இயங்கவுள்ள கமநல சேவைகள் கேந்திர நிலையத்த்தில் விவசாயிகள் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் ருசாந்தன் மேலும் தெரிவித்தார்.
இன்றைய தினம் சேதமுற்ற தமது நிலையத்தினை நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் இந்த முடி எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
36 minute ago
4 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
4 hours ago
9 hours ago