2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

வாகரையில் சட்டவிரோத மின்சாரம் பெற்ற 44 பேர் கைது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ராக்கி)

வாகரைப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை பொலிஸாரினால் மின்சாரசபையினராலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை கதிரவெளி, வம்மிவெட்டுவான், அம்பத்தானாவெளி, கண்டலடி, புளியங்கண்டலடி, வாகரை, கட்டுமுறிவு, ஊரிக்கட்டு, பனிச்சங்கேணி, புச்சாங்கோணி ஆகிய பகுதிகளிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், இதன்போது சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக வாகரைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிழ் மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.


  Comments - 0

  • Ramesh Thursday, 26 August 2010 05:28 PM

    இந்த கிராமங்களுக்கும் மின்சாரம் கிடைத்திருக்கிறதே என மகிழ்வதாக அல்லது.....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .