2021 மே 06, வியாழக்கிழமை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கும் குறைவான புள்ளிகளைப் பெற்ற ஆனால் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடையாத மாணவர்களை ஊக்குவிப்பதற்கான வேலைத்திட்டமொன்றை சமூக நீதிக்கான மனித உரிமைகள் நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இத்தகைய மாணவர்களையும் அவர்களின் முயற்சிகளையும் பாராட்டும் முகமாக அவர்களுக்கான பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கவும் இந்நிலையம் திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் வெட்டுப்புள்ளிகளை தாண்டத்தவறிய மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து தமிழ் மொழி மூல மாணவர்களையும் ஊக்கப்படுத்துவதும் உளரீதியான தாக்கத்திலிருந்து அவர்களை விடுபடச் செய்வதும் இதனுடைய எதிர்பார்ப்பாகும்.

இத்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படுகின்ற அனைத்து மாணவர்களும் தங்களது முழுப்பெயர், பாடசாலையின் பெயர், விலாசம், வீட்டு முகவரி, தொலை பேசி இலக்கம், பெற்றுக்கொண்ட புள்ளி என்பவற்றை குறிப்பிட்டு தபாலட்டை மூலமாக சமூக நீதிக்கான மனித உரிமைகள் நிலையம், 37/6, மன்றேசா வீதி, மட்டக்களப்பு (065௩063101) எனும் முகவரிக்கோ அல்லது 071௮535974 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ எஸ்.எம்.எஸ். மூலமாகவோ அனுப்பி வைக்க முடியும்.

இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் எதிர்வரும் 2ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்க கூடியதாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்வதாகவும் இதற்கு பின்னர் கிடைக்கும் விண்ணப்பங்கள் கருத்தில் கொள்ளப்படமாட்டாது எனவும் நிலையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .