2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கருகில் வெடி விபத்து: பொலிஸார் உட்பட 60 பேர் பலி

Super User   / 2010 செப்டெம்பர் 17 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கருகில் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் பொலிஸார் உட்பட குறைந்தபட்சம் 60 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இம்சம்பவத்தில் காயமடைந்த 44 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

ற்பாறைகளை தகர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் வெடிமருந்தின் காரணமாகவே இவ்வெடிவிபத்து ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம். கருணாரட்ன தெரிவித்தார்.

பலியானவர்களின் சடலங்கள் தற்போது வைத்தியசாலைக்கு கொண்டு அனுப்பப்படுகின்றன.  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு10 சடலங்களும் செங்கலடி வைத்தியாலைக்கு 3 பொலிஸாரின் சடலங்கள் உட்பட 9 சடலங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. 

இறந்தவர்களில் இருவர் சீனப் பிரஜைகள் என இராணுவப் பேச்சாளர் மேஜனர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார்.  இவர்கள் வீதி நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சீனப்பிரஜைகள் இருவர், பொலிஸார் இருவர்  மற்றும் 6 பொதுமக்களின் உடல்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாக அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கே. முருகானந்தன் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 21 பொலிஸாரும் அடங்குவதாக அவர் கூறினார். காயமடைந்த சிலரை வான் மூலம் கொழும்புக்கு கொண்டுவருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


  Comments - 0

  • tharshiny Friday, 17 September 2010 08:40 PM

    இவ்வளவு உயிர் போய் உள்ளது இவ்வளவு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது அவ்வளவிற்கு அக்கறை இல்லாமல் இருந்தார்களா அதிகாரிகள்? போர் இல்லை எனினும் உயிர்கள் போக வேணும் என எழுதி இருந்தால் என்ன செய்வது ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--