2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவுக்காக 685 முதியோர் தெரிவு

Kogilavani   / 2012 நவம்பர் 16 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சுக்ரி)

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவுக்காக 685 முதியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜ் தெரிவித்தார்.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முதியோர் கொடுப்பனவுக்கான வங்கி புத்தகங்கள் வழங்கப்பட்டதாக ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜா மேலும் தெரிவித்தார்.

தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ், முதியோர் கொடுப்பனவுக்கான வங்கிப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வும் நடமாடும் சேவையும் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு ஆரையம்பதி நந்தகோபன் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற நடமாடும் சேவையின் போது, அடையாள அட்டை மற்றும் காணி உறுதிப்பத்திரம், பிறப்பு, இறப்பு,
திருமண சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன் தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மோட்டார் போக்குவரத்துக்கான விண்ணப்பங்கள் அதிகாரிகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

மேலும், காணமாற்போன தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டுக்கான பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதிகளும் காத்தான்குடி பொலிஸாரினால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் காணி ஆணையாளர் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .