2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

மட்டு.மாவட்டத்தில் 7 வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு வைத்தியரும் கடமைபுரியாத ஏழு வைத்தியசாலைகள் இயங்கிவருகின்றன.

வேறு வைத்தியசாலைகளில் கடமைபுரியும் வைத்தியர்கள் இவ்வைத்தியசாலைகளுக்கு தற்காலிக அடிப்படையில் கடமைக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால் அவசர நோயாளிகள் உட்பட ஏனைய நோயாளிகள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எம்.சதுர்முகத்திடம் கேட்போது மகிழுர், மீராகேணி, உன்னிச்சை, மகிழவெட்டுவான், மண்டுர் ஆகிய மத்திய மருந்தகங்களிலும் பழுகாமம்,மண்டபத்தடி ஆகிய பிரதேச வைத்தியசாலைகளிலும் இந்த நிலை நிலவுவதாக அவர் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--