2021 மே 15, சனிக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கபட்ட 77 குடும்பங்களுக்க வாழ்வாதார உதவிகள்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
மண்முனை, கடுக்காமுனை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் கடந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

கரித்தாஸ் எகெட் நிறுவகத்தினரின் அணுசரணையில் இவ்வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

இதன்போது, கடுக்காமுனை கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வால்கட்டு, நாவற்காடு, சோதயன்கட்டு, கடுக்காமுனை, அருள்நேசபுரம் ஆகிய கிராமங்களைச் 77 குடும்பங்களுக்கு இவ் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

கால்நடை வளர்ப்பு, விவசாயம், சிறு வியாபாரம், தையல் இயந்திரம், மீன்பிடி போன்ற தொழில் முயற்சிகளுக்காக வாழ்வாதார பொருட்களை நிறுவகத்தின் இயக்குநர் அருட்தந்தை கிறைட்டன் அவுட்ஸ்கோன், நிறுவக ஊழியர்களான எஸ்.பத்மநாதன், எம்.இயேசுராஜ், ஆர்.நந்தினி உட்பட கிராமசேவகர் ஆகியோர் வழங்கி வைத்தனர்,

இதற்கான நிதியுதவியை கிறிஸ்ரியன் எயிட் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன் மொத்த பெறுமதி 2,310,000 (இருபத்திமூன்று இலட்சத்து பத்தாயிரம்) என கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் ஊடக பிரிவு பொறுப்பாளர் எஸ்.மைக்கல் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .