2025 ஜூலை 12, சனிக்கிழமை

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 8 பேர் கைது

Kogilavani   / 2012 நவம்பர் 19 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                (எம்.சுக்ரி)
சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல தயாராக இருந்ததாக கூறப்படும் சந்தேக நபர்கள் எட்டுப்பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்ததாக களுவாஞ்சிகுடி பொலிஸார்  தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினை தொடர்ந்து களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள வீடொன்றிற்கு சென்ற பொலிஸார் அங்கு மேற்படி நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு மற்றும் கல்குடா, ஓந்தாச்சிமடம் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .