2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

அமைச்சர் விமல் வாழைச்சேனை விஜயம்

Editorial   / 2020 நவம்பர் 25 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், ஆர்.ஜெயஸ்ரீராம்

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் விமல் வீரவன்ச, மட்டக்களப்பு - வாழைச்சேனை கடதாசி 
ஆலைக்கு, உத்தியோகபூர்வ விஜயமொன்றை, இன்று (25) மேற்கொண்டார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையில் இயங்காமல் இருந்து, தற்போது ஆலை வளாகத்துக்குள் பாவனைக்கு உட்படுத்தப்படும் குடிநீர் சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தைப் பார்வையிட்ட அவர், மிக நீண்ட காலமாக இயங்காமல் இருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையை இயங்க வைத்தது போன்று, இப்பகுதிக்கான குடிநீர் பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும் என்றார். 

அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்துரைக்கையில், “நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் மூடப்பட்டிருந்த இந்தக் கடதாசி ஆலை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலில் புனரமைக்கப்பட்டு, தற்போது இயங்க ஆரம்பித்துள்ளது. இதன் உற்பத்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இதேபோன்று, இங்குள்ள குடிநீர்த் திட்டமும் புனரமைக்கப்பட்டு, இப்பகுதிக்கான குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த விஜயத்தில், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், அமைச்சின் உயர் அதிகாரிகள், கிழக்கு மாகாண மற்றும் மட்டக்ளப்பு மாவட்ட திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X