Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஜனவரி 21 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபிட்சத்தை நோக்கிய நாடு” என்ற கருப்பொருளில், இளைஞர்களை தொழில் முயற்சியாளர்களாக உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரச காணிகளை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் அண்மையில் கோரப்பட்டிருந்தன.
இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துகின்ற வகையிலே காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அவர்களின் தொழில் முயற்சிக்கான திட்ட முன்மொழிவுகளும் கோரப்பட்டிருந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் 79,590 பேரின் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில் 70,769 விண்ணப்பதாரிகள் மாத்திரமே காணி பெறுவதற்கு தகுதி உடையவர்களாக உள்ளனர் என காணி பாவனை திட்டமிடல் திணைக்களத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கோரளைப்பற்று வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 8,438 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் 12,860 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 4,652 பேரும், மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 2,714 பேரும், கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 4,239 பேரும், கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவில் 4,007 பேரும் அனுப்பிவைத்துள்ள விண்ணப்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
அத்துடன், கோரளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் 3,044 பேரும், கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் 3,516 பேரும், மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 2,168 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் 2,349 பேரும், போரதீவுபற்று பிரதேச செயலகப் பிரிவில் 4,631பேரும், மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலகப் பிரிவில் 6,585 பேரும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் 3,090 பேரும் அனுப்பிவைத்துள்ள விண்ணப்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
காணி பெறுவோருக்கான நேர்முக தேர்வுக்கான திகதியை பிரதேச செயலாளர்கள் முன்வைக்கின்ற பட்சத்தில் காணி கோரி விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முக பரீட்சைகள் விரைவாக நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காணி பயன்பாட்டுத் திட்டமிடல் கூட்டம், மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் நேற்று (20) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன், பிரதேச செயலாளர்கள், காணி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
9 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
37 minute ago