ஆர்.ஜெயஸ்ரீராம் / 2020 மார்ச் 09 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் அமைப்பால் மகளிர் தின நிகழ்வு, கிரான் பிரதேசத்தில் இன்று (09) ஏற்பாடு செய்யப்பட்டது.
மேற்படி அமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு சுயதொழில் உபகரணங்கள், தையல் இயந்திரம், வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
அத்துடன், கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் அருவி பெண்கள் சிறு குழுக்களும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
மேற்படி, அமைப்பானது மாவட்டத்திலுள்ள பெண்களுக்கு பல்வேறுபட்ட தலைமைத்துவப் பயிற்சிகளை வழங்குவதுடன், அவர்களின் ஆளுமையை விருத்தி செய்வதுடன், பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுப்பதையும் நோக்காகக் கொண்டுள்ளது.


4 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
8 hours ago