2020 நவம்பர் 25, புதன்கிழமை

‘இந்திய அரசு, இலங்கைக்கு தொடர்ந்து உதவும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 15 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கணவனை இழந்த விதவைகளால் நடத்தப்படும் கிழக்குமாகாண சுயதொழில் பெண்கள் அமைப்பான சேவா நிறுவனத்துக்கு நேற்று (14) விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சத்து, பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

இந்திய அரசின் உதவியுடன், பெண்களால் நடத்தப்படும் சுயதொழில் வாழ்வாதார தையல் பயிற்சி நிலையத்தையும் பார்வையிட்ட அவர், அங்கு தயாரிக்கப்படும் பொருட்களின் தரம்குறித்தும் பாராட்டுத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அவர், இந்திய அரசு, இலங்கை மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளை வழங்குவதில் ஒருபோதும் பின் நிற்காது என்று தெரிவித்ததுடன், அதிலும் கிழக்கு மாகாண மக்களுக்கு இந்திய அரசு தொடர்ந்தும் உதவுமென்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .