2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஏறாவூர் நகரசபை தவிசாளருக்கு பிணை

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், பேரின்பராஜா சபேஷ்

கடந்த உள்ளராட்சி மன்ற தேர்தலின் போது, தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பான வழக்கில் ஏறாவூர் நகரசபை தவிசாளர் அப்துல் வாசித் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தின் நீதிபதி திருமதி. கே. ஜீவரானி முன்னிலையில் நேற்று(12) எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இவ்வாறு உத்தரவிட்டார்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவருக்கு எதிராக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒருவரினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பான வழக்கொன்று ஏறாவூர் பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தது.

ஏறாவூர், நகர சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஏறாவூர் ஜூப்ரியா வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தற்போதைய ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் அப்துல் வாசித் தேர்தல் விதிகளை மீறி செயற்பட்டதாக அவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .