2021 மார்ச் 03, புதன்கிழமை

ஓட்டமாவடியில் 84 பேருக்கு டெங்கு

Princiya Dixci   / 2021 ஜனவரி 21 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று (20) வரை 84 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

அத்துடன், 27 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 81 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நோய் அதிகரித்து காணப்படும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தொடர்ச்சியாக பல்வேறு வேலைத் திட்டங்கள் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், மீராவோடை பிரதேசத்தில் வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளல் வேலைத்திட்டம், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையில் நடைபெற்றது. இதில் பொது சுகாதார பரிசோதகர் என்.எம்.எம்.சிஹான், டெங்கு கட்டுப்படுத்தல் வெளிக்கள உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது டெங்கு பரவும் வகையில் நீர் தாங்கி மற்றும் கழிவுகளை வைத்திருந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .