ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 செப்டெம்பர் 22 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாநகர சபைக்கு முன்னால் இன்று (22) நடந்த விபத்தொன்றில் சிக்கி, ஏறாவூர் – ஜிப்ரி, தைக்கா வீதியை அண்டி வசிக்கும் அன்சார் அன்சாப் என்ற 06 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளான் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டியில் நடைபெற்ற தமது உறவினரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு, ஏறாவூர் நோக்கி வானில் திரும்பிக் கொண்டிருந்தபோது, வேகமாகப் பயணித்த ரேஸிங் காரொன்று, வான் மீது மோதியதில் வானில் உறக்க நிலையில் இருந்த சிறுவன் தூக்கி வீசப்பட்டதாகத் தெரியவருகிறது.
சடலம், உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்துத் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago