2020 ஜூலை 15, புதன்கிழமை

திங்கள் தோறும் டெங்கொழிப்பு

Editorial   / 2020 ஜூன் 29 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், க.விஜயரெத்தினம், வ.சக்தி

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் டெங்கு நுளம்புகளை ஒழிக்கும் சிரமதான நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக, மாவட்டச் செயலக வளாகத்தில், இன்று (29) சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தலைமையில், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன், மாவட்டச் செயலக வளாகத்தில் பிரதி திங்கட்கிழமைகளில் பிற்பகல் 03 மணி தொடக்கம் 4.15 வரை சிரமதானம் நடைபெற்று வருகின்றது.

அதேவேளை, அனைத்து அரச அலுவலகங்கள், பாடசாலைகள், அரச கட்டடங்கள் அனைத்திலும் இச்சிரமதானப் பணிகள் இடம்பெறவேண்டும் என்பதுடன், இச்சிரமதானம் நடைபெற்றமை தொடர்பாக குறித்த பிரதேசத்துக்குப் பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென, உரிய அரச அலுவலகங்கள், பாடசாலைகள், அரச கட்டடங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜுன் 12ஆம் திகதி தொடக்கம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 20 பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகியுள்ளனரென, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்குப் பொறுப்பான வைத்திய கலாநிதி வி.குணராஜசேகரம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X