Editorial / 2020 ஜனவரி 03 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய நகரங்களை தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் வேலைத்திட்டம், நாடளாவீய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைத் தூய்மைப்படுத்தும் பணிகளை தவிசாளர் க.பேரின்பராசா, பிரதேச சபை உறுப்பினர் த.நவநீதராஜா, பிரதேசசபை செயலாளர் ஆர்.சுரேஸ்ராம் தலைமையிலான பிரதேச சபை ஊழியர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதியின் அரசடி சந்திக்கு அண்மித்த பிரதேசங்களில், சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக பல வருடங்களாக அகற்றப்படாமல் இருந்த பற்றைக்காடுகளை இயந்திரங்களின் உதவியோடு அழிக்கும் செயற்பாடு, இன்று(3) முன்னெடுக்கப்பட்டது.
அத்தோடு பிரதான வீதியின் ஓரங்களில் அருகில் இருந்த பொதுமக்களால் கொட்டப்பட்டிருந்த கழிவுப்பொருள்களும் அகற்றப்பட்டன.
இதேநேரம் எதிர்வரும் காலத்தில் குறித்த பிரதேசங்களில் குப்பை கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனும் அறிவித்தல் பலகை அக்கரைப்பற்று பொலிசாரின் ஒத்துழைப்போடு நடப்படுவதற்கான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
59 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
3 hours ago
3 hours ago