Editorial / 2019 ஜூலை 21 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுக் கடந்த மூன்று வருடங்களாகச் சிறைவாசம் அனுபவித்துவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சந்திரகாந்தனை, மட்டக்களப்புச் சிறைச்சாலையில் அமைச்சர் மனோ கணேசன் இன்று (21) காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அரசியல் நலன் விரும்பிகளும் நண்பர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே பிள்ளையானைச் சந்தித்ததாக அமைச்சர் மனோ கணேசன், தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, பொதுவான நடப்பு அரசியல் சம்பந்தமாகவும் கடந்த கால, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடியதாகத் தெரிவிந்த அமைச்சர் மனோ கணேசன், எதிர்கால அரசியல் நகர்வுகள் தொடர்பில் பேசிய விடயங்களைத் தற்போது தெரிவிக்க விரும்பவில்லை என்றும் தமிழ்மிரருக்கு கூறினார்.
7 hours ago
8 hours ago
20 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
20 Jan 2026