Princiya Dixci / 2020 ஒக்டோபர் 19 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு (பிள்ளையான்) எதிரான வழக்கு விசாரணைகள், நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, சட்டமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள், நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காதமையால், இவ்வழக்கு விசாரணைகள், நவம்பர் மாதம் 2ஆம், 10ஆம் மற்றும் 16ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீதான இந்த வழக்கு விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில், இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்படி ஒத்திவைக்கப்பட்டன.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், அதற்கான நீதிமன்ற அனுமதியை, சட்டத்தரணி கோரினார்.
இவ்விடயத்தை, வெள்ளிக்கிழமை (23) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதென மேல் நீதிமன்ற விசேட நீதிபதி சூசைதாசன் அறிவித்தாரென, சந்திரகாந்தனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
2005.12.25 திகதியன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை செய்யப்பட்டார்.
27 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
52 minute ago