2026 பெப்ரவரி 24, செவ்வாய்க்கிழமை

பெண்களை வலுப்படுத்தும் திட்டம்பற்றி ஆராய்வு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு - வவுணதீவுப் பிரதேசத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தின்  அனுசரணையில் செயற்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்பற்றி ஆராயும் கூட்டம் கிரமமாக இடம்பெற்று வருகிறது.

வவுணதீவுப் பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை வலுப்படுத்தும் திட்டத்தின்கீழ்,  ஐரோப்பிய ஒன்றியத்தின்  உதவியுடன் செயற்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள்பற்றி ஆராயும் கூட்டம், வவுணதீவு பிரதேச செயலகத்தில் இன்று (19) நடைபெற்றது.

இந்நிகழ்வில், வவுணதீவு பிரதேச செயலக  வெளிக்கள உத்தியோகத்தர்கள்,  கிராம செயற்றிட்டப் பயனாளிகள் உட்பட அமுலாக்க குழுவினரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டம், கிராமங்களில் எவ்வாறு முன்னோக்கி செல்கின்றது என்பது பற்றியும் இத்திட்டத்தின் குறை, நிறைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டன.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களை, கூட்டுறவின் ஊடாக மேம்படுத்தும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் வீ எபெக்ற் (We Effect) எனும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தினூடாக உன்னிச்சை, பன்சேனை ஆகிய கிராமங்களில்,  நான்கு ஆண்டுகால செயற்றிட்டமாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .